வெள்ளரி பரவலாகப் பயிரப்படும் ஒரு பயிராகும். இதன் காய் பச்சையாக உண்ண வல்லது. சத்து மிக்கது. இது சலாட்டில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்து கொலஸ்ராலை குறைக்க வல்லது.
வெள்ளரிக்காய் சீஸ் ரோல் செய்ய தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 2
கேரட் – 1
சீஸ் துண்டுகள் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
வெங்காயம் – 1
காய்ந்த திராட்சை – சிறிதளவு
தேன் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெள்ளரிக்காய் சீஸ் ரோல் செய்முறை :
1 வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக நீளவாக்கில் (சீஸ் துண்டுகள்) வெட்டிக்கொள்ளவும்.
மற்றொரு வெள்ளரிக்காய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கேரட்டை துருவிக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், கேரட், எலுமிச்சை சாறு, வெங்காயம், உப்பு, தேன், திரட்சை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு வெள்ளரிக்காய் துண்டை கீழே வைத்து அதன் மேல் ஒரு சீஸ் துண்டை வைக்கவும்.
அதன் நடுவே, கலந்து வைத்துள்ள கலவையை வைத்து ரோல் செய்யவும். இது பிரியாமல் இருக்க சிறிய குச்சியால் குத்தி வைக்க வேண்டும்.
சுவையான சத்தான வெள்ளரிக்காய் சீஸ் ரோல் ரெடி.
No comments:
Post a Comment