Latest News

  

பீர் டின்னில் காந்தி படம்!


அமெரிக்க வடக்கு கரோலினாவின் இந்தியன் பேல் அல் பீர் நிறுவனம் தனது தயாரிப்பில் இந்து கடவுள் சிவனின் படத்தை போட்டிருந்தது இந்துக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளதாக கிறிஸ்தவ, புத்த மற்றும் ஜூவிஸ் மத தலைவர்கள் ஒருசேர எதிர்ப்பு தெரிவித்திருந்தது நினைவிருக்கும். இந்த நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனம் காந்தி பீர் டின்களை புதுமையான முறையில் வெளியிடுவதாக நினைத்துக் கொண்டு. அந்த பீர் டின்னில் மகாத்மா காந்தியின் படத்தை இடம் பெறச் செய்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது..

மதுவுக்கு எதிரானவரும், இந்தியாவில் மகாத்மா என்றழைக்கப்படுபவருமான காந்தி படத்தை பீர் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உடனடியாக டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனிடையே ஆந்திர மாநிலம் நம்பள்ளி கோர்ட்டில் இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்கீல் ஜனார்த்தன கவுடா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.அவர் தன் மனுவில், ”இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க மது நிறுவனம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளது. அவர்களது செயல் கண்டனத்துக்குரியது.

பீர் டின்னில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டதற்காக அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தேச கவுரவச் சட்டம் 1971 பிரிவு 124 (ஏ)யின்படி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி இருப்பதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாது.”என்று அவர் தன் மனுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.