பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வையும் அவனது
தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே
வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
(வரஹ்)
அமீரக தாஜுல் இஸ்லாம்
இளைஞர் சங்க (TIYA)வின் பொதுக்குழு கூட்டம் 01.01.2015 வியாழன்
மாலை அன்று துபாயில் சகோ. N. சேக்காதி அவர்கள் ரூமில் அமீரக தலைவர் N.முகமது மாலிக் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மஹல்லாவாசிகள்
முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
நமது TIYA அல்லாஹ்வின் அருளால் தனது 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற
நிகழ்வை சிறப்பிக்கும் வண்ணமாகவும் TIYA வின் கடந்த 9 ஆண்டுகள் செய்து வந்த சேவைகள் குறித்தும்
எதிர்கால தலைமுறையினர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் ஒரு வரலாறாக பதியப்பட வேண்டுமென்பதற்காக
ஒரு சிறப்பு மலர் ஒன்று வெளியிட வேண்டுமென்று ஏக மனதாக இந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
நமது TIYA வின் மலரில் நமது மஹல்லா சகோதரர்களின் எழுத்தாற்றலை ஊக்கப்படுத்தும்
வகையில் நல்ல பல ஆக்கங்கள் பதியப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தலைப்புகளுக்கு உட்பட்டு உங்களின் ஆக்கங்களை
நமது tiyawest@gmail.com என்ற ஈமெயில்
முகவரிக்கு இம்மாத (ஜனவரி-2015) இறுதிக்குள் அனுப்பிவைக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.
மலர் குழு பொறுப்பாளர்கள்:
1. V.T.அஜ்மல் கான்
2. M. ஹாஜா முகைதீன் (SP)
3. N. முகமது மாலிக்
4. A. முகமது அமீன்
5. S.M.அப்துல் காதர்
6. S. நவாஸ்
மலர் குழு ஆலோசகராக
நமது அமீரக மஹல்லாவின் மூத்த சகோதரர் M. காதர் முகைதீன் காக்கா
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
மலர் குழு பொறுப்பாளர்களின்
பரிசீலனையின் இறுதி முடிவின் படியே ஆக்கங்கள் அனைத்தும் பதியப்படும்.
கீழ்க்காணும் தலைப்பிற்க்குட்பட்டே
ஆக்கங்கள் இருக்க வேண்டும் :
- கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை
- மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை
- சுகாதாரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கட்டுரை
- மறுமை குறித்த அச்சமூட்டும் கட்டுரை
- விஞ்ஞான வளர்ச்சி குறித்த கட்டுரை
- இயற்கை குறித்த கட்டுரை
- பொதுவான கவிதைகள்
- அரசு துறையில் வேலை வாய்ப்பு சம்பந்தமான / அரசு உதவிகள் பெறும் முறைப் பற்றிய
விழிப்புணர்வு கட்டுரை
- இஸ்லாமிய வரலாறு குறித்த கட்டுரை
சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில்
நமது மஹல்லாவின் முன்னேற்றத்திற்காகவும் மஹல்லா இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான
உடற்பயிற்சி மையம் மற்றும் நூல் நிலையம் ஆகியவற்றை சீரமைப்பதற்கு கால தாமதமின்றி விரைவில்
பணியை துவக்கி முடித்து கொடுப்பதெனவும் அதற்கான ஆயத்த பணிகள் வரும் வாரங்களிலேயே தொடங்குவது
எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பூமி வெப்பமாவது
குறித்து உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கவலை கொண்டிருக்கிற நிலையை அறிந்த ஐ.நா. மன்றம்
மரம் வளர்ப்பதைக் கொண்டு பூமி வெப்பமாவதை தடுக்க இயலும் என உலக நாடுகளை வலியுறுத்தி
வருகின்றது. அதனை செயற்படுத்தும் முகமாக நமது மஹல்லாவிலும் TIYA அமைப்பின் சார்பாக மீண்டும் மரக்கன்றுகள் நட்டு அதனை தாயக
TIYA நிர்வாகமே பொறுப்பேற்று நடும் மரக்கன்றுகளை
பராமரித்து வரவேண்டுமென்றும் அதற்கான செலவினங்களை TIYA ஏற்றுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அரசு வழங்கும் முதியோர் மற்றும் விதவைகள்
மறுவாழ்வு உதவிகள் நமது தெரு மஹல்லாவாசிகளுக்கு சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கில்
அதற்கான முகாமை நமது மஹல்லாவின் தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
என்றும் அன்புடன்
அமீரக TIYA
நிர்வாகிகள்
No comments:
Post a Comment