Latest News

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு மூடுவிழா? முன்பதிவு செய்தவர்களும் ஊழியர்கள் கலக்கம்!


ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், பொருளாதார நெருக்கடி காரணமாக மூடுவிழா கண்டுவிடுமோ என்று செய்திகள் வெளியாகி உள்ளதால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஸ்பைஸ் ஜெட் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் அடிக்கடி பெரும் குழப்பம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் ஸ்பைஸ்ஜெட் சிக்கித் தவிப்பதால், இந்நிறுவனத்தில் பணியாற்றும் 5,300 ஊழியர்கள் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகியிருப்பதால் கலக்கத்தில் உள்ளனர்.

ஸ்பைஸ் ஜெட் விமானிகள் உள்ளிட்ட அதிக வருமானம் ஈட்டும் ஊழியர்கள் சுமார் 130 பேர் தங்களது பணி விலகலைத் தெரிவித்து விட்டனர். இவர்கள் உடனடியாக வேறு விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து விடலாம் என்றாலும், மற்ற ஊழியர்கள் வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.