உலகம் முழுவதும் மோடியை பாராட்டும் போது கூட்டணியில் இருந்த வைகோ வேண்டுமென்றே விமர்சனம் செய்தார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ இன்று அறிவித்தார். வைகோவின் முடிவு பற்றி கருத்து கூறியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், கூட்டணியில் இருந்த போது தொகுதிகளை விட்டு கொடுத்தோம். சகோதர உணர்வுடன் தான் இருந்தோம். ஆனால் உலகம் முழுவதும் மோடியை பாராட்டும் போது, வைகோ வேண்டுமென்றே விமர்சனம் செய்தார். இதனால் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டது. மதிமுக விலகலால் எங்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் பாஜகவிற்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது. எங்களுடன் இருந்தால் சகோதரர் வைகோவிற்குத்தான் பலம் அதிகம். இப்போது அவராக விலகி தனது பலத்தை குறைத்துக்கொண்டுள்ளார் என்றும் தமிழிசை கூறியுள்ளார்
No comments:
Post a Comment