TIYAவின் நல் வாழ்த்துக்கள்
மீரா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சகோ.F.சாகுல் ஹமீது சிறுவயது முதல் மார்க்க பற்று மட்டுமல்லாது பொது விசையங்களி மிகுந்த அக்கரையோடும் ஆர்வத்துடனும் செயல்பட கூடியவர் அவரின் கல்வி சேவையில் மீண்டும் பல்வேறு விருதுகளை வாங்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிராத்தனை செய்வோம் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைததில் அவருக்கு மட்டும் பெருமை அல்ல அதிரைகே பெருமை நமது மஹல்லாவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொவோம். TIYAவின் சார்பாக எங்கள் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொகிறோம்.
அதிரையை சேர்ந்தவர் F. சாகுல் ஹமீது. அனைவராலும் 'மீரா' என அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மார்க்க பற்றுதலை பேணி நடக்கும் இவர் கல்வி பணியில் எந்நேரமும் மூழ்கி இருப்பவர்.
இந்நிலையில் கேஎஸ்ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்ட்டியூஷன் சார்பில் தமிழகமெங்கும் பணிபுரியும் சாதனை நிகழ்த்திய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர்' விருது வழங்குவதற்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பரிசிலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இறுதியில் விருதுக்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நமதூரை சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களும் ஒருவர். அதிக மதிப்பெண்கள் - அதிக தேர்ச்சி - சிறந்த கல்விப்பணி - மாணவர்கள் நலனில் அதிக அக்கறை உள்ளிட்ட தகுதியின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு திருச்சங்கோட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் ( INSA ) டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களிடமிருந்து பெற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற சாகுல் ஹமீது அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் , குடும்பத்தினர், ஊர் பிரமுகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்தினர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment