Latest News

கர்ப்பப்பை கவனம்: பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!


விழிப்புடன் இருந்தால் மட்டுமே தப்பிப்பது சுலபம் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுவது இந்தியாவில் தான். ஒவ்வொரு வருடமும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்ப வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் பாதிபேர் தான் இதிலிருந்து வெற்றி பெறுகின்றனர். 72ஆயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய நோய். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே உயிரிழப்பை தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

கர்ப்பப்பையின் கீழ் பகுதியானது பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய்போன்ற அமைப்பில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின் போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே இதை எதிர்த்து வெற்றிபெறுகிறது. சில பெண்களுக்கு இந்த கிருமியானது சில நாட்களுக்கு உடலுக்குள்ளேயே காத்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் இயல்பாக உள்ள செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்த செல்கள் அதிவேகத்தில் பெருக்கம் அடைந்துவிடுகிறது. இந்த செல்கள் இறப்பதில்லை. பாலியல் உறவின்போதே இந்த வைரஸ் கிருமியானது பரவுகிறது. என்ன தான் வைரஸ் கிருமியால் புற்றுநோய் பரவுகிறது என்றாலும் இளம் வயதிலேயே உடல் உறவு (15 வயதிற்கு கீழ்) பலருடன் உறவு, சிகரெட் பிடித்தல், சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில காரணிகள் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடுகிறது. ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களால் ஹியூமன் பாப்பிலோமா வைரஸை எதிர்த்து போராட முடிவதில்லை.

கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் அதன் அறிகுறிகளானது எதுவும் தெரியாது. கர்ப்பவாய் புற்றுநோய் முற்றிய நிலையை அடைய 10ஆண்டுகள் ஆகும். இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற வலியுறுத்தப்படுகிறது..

அறிகுறிகள்

பிரச்சனை முற்றிய சமயத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அதிகவலி அல்லது இரத்தபோக்கு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறாக வெள்ளைப்படுதல், மாதவிலக்கின் போது இரத்தம் கட்டியாக வெளியேறுதல் அல்லது மிகக்குறைந்த அளவில் இரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். மெனோபாசுக்குபிறகு உதிரப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும்.

தவிர்க்க வேண்டியவை என்ன?

திருமணத்திற்கு முன்பான உடலுறவையும், புகைபிடித்தலையும் தவிர்க்கவேண்டும். 9முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். முதல் ஊசிக்கு பிறகு 8 வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ், 6 வாரங்கள் கழித்து மூன்றாவது டோஸ் என எடுத்துக்கொள்ளலாம். பெற்றோரும் சிறுவர்களும் இதை போட்டுக்கொள்ளலாம். பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பூசி போட்டாலும் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோயை தடுக்கலாம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.