Latest News

எங்கள் தலைமையை ஏற்றால் தமிழகத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி நீடிக்கும் டாக்டர் ராமதாஸ் பேட்டி !! சபாஸ் சரியான போட்டி !!


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாகர ராமதாஸ் தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

15 ஆண்டுகளுக்கு பின் பா.ம.க. தமிழகம் முழுவதும் வளர்ந்துள்ளது. திடீரென ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்தது. புதுச்சேரியில் கட்சி தொடங்கப்பட்ட 2 மாதத்தில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமையும்.
2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் மாற்று அணி போட்டியிடும். எங்களது தலைமையை ஏற்றால் தமிழகத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி நீடிக்கும்.

கர்நாடகாவை சேர்ந்த தலைவர்கள், அங்கு மக்களி டம் தங்களது செல்வாக்கு சரியும் போதெல்லாம் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் எனக்கூறி வரு கின்றனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முழுவீச்சில் நடை பெறும் போது இந்த கருத்தை கூறி எடியூரப்பா வெற்றி பெற்றார். தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்று கூறி வருகிறார். பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் இது போன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். நாங்கள் பெங்களூர் மற்றும் மைசூர் எங்களுக்கு சொந்தம் என்று கூறினால்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி போதை பொருள் தீமை குறித்து விரிவாக பேசியுள்ளார். இது வரவேற் கத்தக்கது. முதலில் தேசிய அளவில் மது விலக்கு கொள்கை கொண்டு வர வேண்டும். போதை பொருட் கள் இளைஞர்களை தவறான பாதைக்கே அழைத்து செல்லும். எனவே நரேந்திர மோடி இதை பேச்சு அள வில் நிறுத்திவிடாமல் செயல் படுத்த வேண்டும்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் மது கொண்டுவரப்பட்டது. நாங் கள் வருகிற சட்டமன்ற தேர் தலில் பிரதான பிரச்சினை யாக மதுவை முன்வைப் போம். தர்மபுரி, மொரப்பூர் ரெயில் திட்டத்தை நிறை வேற்ற டாக்டர் அன்பு மணி முயற்சி செய்து வருகிறார். ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு, அவரது நண்பர். அதனால் அந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

ரெயில்வே போட்டி தேர்வில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சமீபத்தில் பதவி இழந்த முதல்வர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் தமிழ்நாட்டின் மானம் பறிபோகிறது. ஆனால் அ.தி.மு.க.வினர் அவரை மக்கள் முதல்வர் என பேசிவருகிறார்கள். ஊழலில் சிறை தண்டனை பெற்றபின்பும் ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை. இன்றும் சத்துணவு வேலைக்கு ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் என பேரம் பேசுகிறார்கள். மக்களின் வரிப்பணம் மந்திரிகளின் பாக்கெட்டுகளுக்கு செல் கிறது. தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 15&க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து உள் ளன.

இதற்கு பல்வேறு கார ணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் வறுமை தான். கருவுற்ற தாய்மார்களுக்கு முறையான சத்துணவு இல்லாததே காரணம். மேலும் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை மேம் படுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை யின் கிளையை தர்மபுரியில் தொடங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அனைத்து பகுதிக்கும் சீராக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.