Latest News

12 வருடம் வயிற்றுக்குள் கத்தரிக்கோலுடன் வாழ்ந்த நபர்…! விடியோ இனைப்பு !!


12 வருட காலமாக தனது வயிற்றுக்குள் கத்தரிக்கோலொன்று வைத்து தைக்கப்பட்டிருப்பதை அறியாது நபரொருவர் வாழ்ந்த சம்பவம் கஸகஸ்தானில் இடம் பெற்றுள்ளது.

மேற்படி நபருக்கு 12 வருடங்களுக்கு முன் மருத்துவமனையொன்றில் மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சையின் போது அறுவைசிகிச்சை நிபுனர் ஒருவர் அவரது வயிற்றுக்குள் தவறுதலாக கத்தரிக்கோலை வைத்து தைத்திருந்தார்.

இதனால் இத்தனை வருட காலமாக வயிற்றுவலியால் துன்பப்பட்ட மேற்படி நபர் அண்மையில் அதே மருத்துவமனைக்கு சிகிச்சை பெறசென்றபோது எக் ஸ்ரெ பரிசோதனையில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டது.

தனது உடலில் கத்தரிக்கோலை வைத்து தைத்து தன்னை இத்தனை வருடங்களாக கடும் வேதனைக்குள்ளாக்கிய அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தாக்கல் எதனையும் செய்ய முயற்சிக்காத அந்த நபர் தனது வயிற்றில் வைத்து தைத்த கத்தரிக்கோலை உடனடியாக அகற்ற மற்றொரு அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யக்கோரியுள்ளார்.

அவருக்கு வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர் 3 வருடங்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மரணமடைந்திருந்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.