வீட்டை அழகாக வைத்திருக்க அலங்கார வேலைப் பாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பராமரிப்பு பணிக் கும் கொடுக்க வேண்டும். முக்கியமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வீடு கட்டப்பட்டபோது இருந்த புதுப்பொலிவு மாறாமல் காட்சியளிக்கும். அதிலும் பருவ காலத்துக்கு ஏற்ப புதுப்பித்தலுடன் கூடிய பராமரிப்பு பணியை செய்ய வேண்டியது அவசியம். குளிர்காலம் தலைதூக்க தொடங்கி இருக்கும் நிலையில் வீட்டை பட்ஜெட்டுக்குள் புதுப்பிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
* வீட்டை புதுப்பிக்க முடிவு செய்வதற்கு முன்பு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். எவ்வளவு தொகைக் குள் வீட்டை புதுப்பிக்க போகிறோம் என்பது பற்றி தோராயமாக பட்ஜெட் போட வேண்டும். நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை செலவாகும் என்பதை மனதில் கொண்டு, அவசியமான வேலைகளுக்கு மட்டும் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் எல்லா வேலையையும் முடிக்க நினைத்து சிக்கலை எதிர்கொள்ளக்கூடாது.
* வீட்டை புதுப்பிக்கும்போது நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை செய்ய வேண்டும். கட்டுமானத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் புகுந்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப வீடும் புதுமையுடன் காட்சியளிக்க செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* தற்போது ஒவ்வொரு கட்டுமான பொருட்களுக்கும் மாற்றுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவது கட்டுமான செலவை குறைக்கும். அதே நேரத்தில் அந்த பொருட் களின் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம். மறு சுழற்சி முறையில் ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அத்தகைய பொருட்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும். அதேவேளையில் குறைந்த செலவில் தரமான பொருட்களை கொண்டு சீரமைத்த திருப்தியும் கிடைக்கும்.
* வீட்டை புதுப்பிக்கும்போது சில வேலைகளை தாமே முன்னின்று செய்ய வேண்டும். அதன் மூலம் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்கு மிகாமல் வேலையை முடிக்கலாம். பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
* அறையின் சில பகுதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டிய திருக்கும் போது சுவரை இடித்தல் போன்ற பணிகளை நீங்களே மேற்கொள்வதன் மூலம் அதிக தொகையை மிச்சப்படுத்தலாம்.
* வீட்டை புதுப்பிக்கும்போது இருக்கும் இடம் பெரியதாக தோன்றுமாறு மாற்றங்களை செய்வது அவசியமாகும். அதுவே புதுப்பித்தல் பணியை முழுமையாக செய்து முடித்த திருப்தியை தரும். அதிலும் சமையல் அறையை புதுப்பிக்கும்போது மாடுலர் கிச்சன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது அறையை மிளிர செய்யும். அறையும் விசாலமாக இருப்பது போன்று காட்சிதரும். அதற்கு ஏற்ப தேவையான அளவுக்கு அலமாரிகளை அமைத்து விட வேண்டும்.
* அறையில் இருக்கும் பழைய விளக்குகளை மாற்றிவிட வேண்டும். அதிலும் அறையில் குறைந்த வெளிச்சம் இருப்பதாக தோன்றினால் பிரகாசமான வெளிச்சம் தரும் விளக்குகளை பொருத்த வேண்டும். தற்போது மின்சாரத்தை சேமிக்கும் விளக்குகள் அதிக அளவில் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் அறைக்கு பொருத்தமான விளக்குகளை தேர்ந்தெடுத்து அறையை மிளிர செய்யலாம்.
* வீட்டை புதுப்பிக்கும்போது தேவையில்லாத சில பொருட் களை அப்புறப்படுத்திவிட வேண் டும். சில பொருட்களை மறு விற்பனை செய்து விட வேண்டும். அதன் மூலம் செலவை குறைத்து குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் புதுப் பிக்கும் பணியை முடித்துவிடலாம்.
No comments:
Post a Comment