சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுத வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. அதேபோல், கோவில்கள் இருந்த இடத்தில் உள்ள மசூதிகளை இடித்து மீண்டும் இந்து கோவில்களை எழுப்ப வேண்டும் என அவர் பேசி உள்ளார் . பனாரஸ் இந்து பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. அப்போது அவர் பேசுகையில், ‘
சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட பள்ளி, கல்லூரி வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி அமைக்க வேண்டும். அவை திரித்து எழுதப்பட்டுள்ளன.
இங்கிலாந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை விட்டு விட்டு இந்தியர்களால் எழுதப்பட்ட புத்தகங்களே பிரதானப்படுத்த வேண்டும். அதேபோல பள்ளி, கல்லூரி பாடங்களில் அக்பர், பாபர் போன்ற முகலாய மன்னர்கள் குறித்த பாடங்களை நீக்கி விட்டு இந்து மன்னர்கள் குறித்து அதிகம் கூறப்ப வேண்டும்.இப்படி வரலாற்று புரட்டுகள் செய்வதில் வல்லவர்கள் தான் இந்த ஹிந்துத்துவா சக்திகள் இவர்கள் நாட்டின் வளர்ச்சி வளர்ச்சி என்று கூறி நாட்டை சுடுகாடாக்க திட்டமிட்டு இருப்பது நம்முடைய கண்முன்னே தெரிகிறது மேலும், இந்து கோவில்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதிகளை இடித்து அங்கு புதிய கோவில்களைக் கட்ட வேண்டும். பள்ளிகளில் தாய்மொழியைத் தவிர்த்து இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயம் கற்றுத் தரப்பட வேண்டியது அவசியம்.
பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். மதமாற்றம் என்பது பல காலமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க சட்டம் கொண்டு வராத வரைக்கும் அது தொடரத்தான் செய்யும் என்றார் சாமி.இப்படி தேவையல்லாத நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் விதமான சிந்தனையை மக்களிடையை விதைப்பது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தகா அமையும் .செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்தை மக்களிடையை விதைப்பது மக்கள் யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள்
ஒற்றுமை இந்தியாவை சீர்குலைக்கவே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பேசிவருகிறது இந்தியாவில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்க்கு . ஒரு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியதர்க்கு இன்னும் உலக அரங்கில் இந்தியா தலைநிமிரமுடியவில்லை
சு .சாமி தொடர்ந்து இஸ்லாமியர்களை மாத்திரம் அல்லாது தலித்துகளை தறைக்குறைவாக பேசுவது கிருத்துவர்களை தரைக்குறைவாக பேசுவது தமிழர்களை பொருக்கி மற்றும் தமிழ் தேசியவாதிகளை எலி என்று தனது த்விட்டேர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வது மிக கண்டனத்திற்கு உரியது
No comments:
Post a Comment