சிகெரட்டை சில்லரையாக விற்பனை செய்ய தடை விதிக்குமாறு பிரதமர் மோடிக்கு புற்றுநோயாளி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி: சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடைவிதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புற்று நோயாளி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மும்பையைச் சேர்ந்த முன்னாள் சுங்க ஆணையர் தீபக் குமார், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நான் சிகரெட்டுகளை தொடர்ந்து புகைத்ததால், 2008 ஆம் ஆண்டு தனக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு, அதனால், எனது குரல் பெட்டி அகற்றப்பட்டு, மிஷினின் உதவியால் பேசி வருகிறேன்.
பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் சிரமப்படும் எனக்கு கடந்த ஆண்டு நாக்கில் புற்றுநோய் கண்டறியப்பட்டு, அதையடுத்து, நாக்கின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டு அவதியுறுகிறேன், எனவே எனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதால், சிகரெட்டை சில்லறையாக விற்க தடை விதிக்கவும்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே சிகரெட்டுகளை சில்லறையாக விற்க மத்திய அரசு தடை விதிக்க யோசித்திருந்த நிலையில் சில மத்திய அமைச்சர்களும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த தடை நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment