சகாரா நிதி நிறுவன முறைகேட்டில் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இன்று மாநிலங்களவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுதீப், சகாரா குழும அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்திய போது, சிகப்பு கலர் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் அமித் ஷாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், எனவே கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், சாரதா குழுமத்துடன் அமித்ஷாவுக்கு உள்ள முறைகேடான தொடர்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 'சகாரா' என்று எழுதப்பட்டு இருந்த சிவப்பு நிற புத்தக்கத்தை கையில் வைத்துக் கொண்டு கோஷங்களையும் எழுப்பினர்
இந்நிலையில், அமித் ஷாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், இது அக்கட்சியின் “அரசியல் ஸ்டண்ட்” என்றும் பா.ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment