மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் கடந்த 74 மணி நேரத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மஹாராஷ்டரா மாநிலத்தின் விதர்பா பகுதிகளில், பயிரிழப்பினால் கடந்த 74 மணி நேரத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விதர்பா ஜன அந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்டுள்ள அனைத்து விவசாயிகளும் பருத்து உற்பத்தியாளர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். சையது அன்சர் அலி, குஷல் கபசே, புனாஜி மன்வார், சோமேஷர் வதே, மரோதி ரதோட் ஆகிய அனைவரும் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மதுகார் அட்சர், வித்கல் தவ்வதே, மரோதி கோட் என்ற மூன்று பேரும் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது குறித்து பேசிய விதர்பா ஜன அந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், ”விவசாயிகள் தற்கொலை விதர்பா பகுதிகளில் ஒரு முக்கியப் பிரச்சனை. அரசு இந்த விவகாரம் பற்றி சிந்தித்து, பருத்தி விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தப்பட்ச விலையை உயர்த்தித் தரவேண்டும்” என்றார்.
மேலும், 2014 ஜனவரியில் இருந்து தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்திருப்பதாக திவாரி கூறியுள்ளார்.ஆட்சி மாறினாலும் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை மாறவில்லை
No comments:
Post a Comment