மோடி பெருமுதலாளிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ளார் என்று சி.பி.ஐ.(எம்) மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியபோது, “நரேந்திர மோடி பெரு முதலாளிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவோடு அவர் ஆட்சியமைத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியை ஆதரித்து கடுமையாக பிரச்சாரம் செய்தனர்.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் பொதுத்துறை பங்குகளை விற்பது, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்ப்பது, தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்தி தொழிலாளர் உரிமைகளை பறிப்பது, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை சீர்குலைப்பது, மானியங்களை வெட்டுவது பொது விநியோக முறையை சீரழிப்பது என முற்றிலும் மக்கள்விரோதப் பாதையில் மோடி அரசு நடைபோடுகிறது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் இயங்கும் பல்வேறு கட்சிகள் தங்களிடம் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக அவ்வப்போது கூறுவதுண்டு. ஒவ்வொரு கட்சியும் கூறும் எண்ணிக்கையை எண்ணிப்பார்த்தால் அது உலக மக்கள் தொகையைவிட கூடுதலாக இருக்கும் என்றும், அரைகுறை அறிவு ஜீவிகள் தற்போது மலிவான விலைக்குக் கிடைக்கிறார்கள். வாங்கிய கூலிக்கு விசுவாசமாக சிலர் கூவுகிறார்கள். சிலர் பெற்ற கூலிக்கு அதிகமாகவே கூவுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment