பல நாடுகளில் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இந்த ஆடையைத் தான் போட வேண்டும், இந்த ஆடைகளைப் போடக் கூடாது என்று சட்ட திட்டங்கள் உள்ளன. பொதுவாக நைட்டி என்பது மேலை நாடுகளில் இரவில் உறங்கும் போது நிம்மதியாக எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஆடையாகும்.
அதனை அவர்கள் இரவில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்த நைட்டியை போட்டுக் கொண்டு அந்நாட்டுப் பெண்கள் கடைக்கோ, பள்ளிக்கோ செல்வதில்லை. பல குடும்பங்களில் நைட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி தற்போதைய பெண்கள் நைட்டிக்கு அதீத வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் பகல் நேரத்திலும் நைட்டியை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் தவறில்லை. ஆனால், அவசரத்துக்கு கடைக்கு செல்லும் போது நைட்டியோடு செல்வதும், பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வர நைட்டியோடு செல்வதும், இன்னும் சொல்லப் போனால், நைட்டியோடு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களையும் நாம் நிச்சயம் பார்த்திருப்போம். இதைத் தான் தவறு என்கிறோம்.
பொதுவாக தமிழகத்தில் பள்ளிகளுக்குள் நைட்டியோடு வரும் தாய்மார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கட்டுப்பாடு இருந்தும், பெரும்பாலான தாய்மார்கள் நைட்டியோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிக்கு மட்டுமல்ல கோவில்களுக்கு சில பெண்கள் நைட்டி அணிந்து வருவதை பார்க்க முடிகிறது. இது மிகவும் தவறானது.
தாய்மார்களே, நைட்டியை போட்டுக் கொண்டு பள்ளிக்கு, கோவில்களுக்கு, கடைகளுக்கு வரும் பழக்கத்தை கைவிடுங்கள். நைட்டி என்பது இரவில் மட்டும் அணியும் உடை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
தகவலுக்கு நன்றி.
மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.


No comments:
Post a Comment