தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி முஸ்லிம்கள் நிறைந்து வாழக்கூடிய ஊராகும். இந்த ஊரில் டாக்டராக 40 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியவர் டாக்டர் கோட்டை சாமி.
இவர் பணி புரிந்த காலத்தில் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி சுற்று வட்டார (வழுத்தூர், வடக்கு மாங்குடி, பசுபதி கோவில்) முஸ்லிம்களுடன் குடும்ப உறுப்பினரை போல உண்மையான தொப்புள் கொடி உறவாகவே பழகி வந்தார்.
பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வைத்து பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மத்தியில் ஏழைகளுக்கு குறைந்த பணம் பெற்று சேவை புரிந்த நல்ல மனிதர் டாக்டர் கோட்டை சாமி. இந்நிலையில் நேற்று அவர் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
அவரது இழப்பு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த ஊர் மக்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது உடலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அவரது உடலை காண பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்ட புகைப்படம்தான் நீங்கள் காண்பது. அவரது ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment