இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் மூன்று இளைஞர்களை திட்டமிட்டுக் கொலை செய்ததாக, இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு படையினருக்கு இந்திய ராணுவ நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.
இந்த இளைஞர்களுக்கு பணமும் வேலைவாய்ப்பும் தருவதாகக் கூறி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியே வரவழைத்து, பின்னர் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோட்டருகே இவர்கள் சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இந்த சம்பவம் நான்காண்டுகளுக்கு முன்னர் நடந்தது.
அவர்கள் பாகிஸ்தானத் தீவிரவாதிகள் என்று பொய்யாகப் பின்னர் முத்திரை குத்தப்பட்டனர்.
இந்த போலி என்கவுண்டர் நடந்த பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல வாரங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ரத்தக்களறியும் ஏற்பட்டது.


No comments:
Post a Comment