Latest News

மிரட்டிய ஜெ. ஆதரவாளர்கள்.. நெருக்கடி கொடுத்த பாஜக.. மனம் திறக்கும் பி.வி. ஆச்சார்யா


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த தாம் மிரட்டப்பட்டதாகவும் வழக்கில் இருந்து விலகுவதற்கு பாரதிய ஜனதா கட்சி நெருக்கடி கொடுத்ததாகவும் பி.வி. ஆச்சார்யா தமது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்பு அரசு வழக்கறிஞராக பி.வி. ஆச்சார்யா, 2011ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். தற்போது ஆச்சார்யா "‘All from memory'" என்ற தலைப்பில் தமது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். பெங்களூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது
.
இப்புத்தகத்தில் ஆச்சார்யா பதிவு செய்துள்ள சில தகவல்கள்:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகியதற்காக அவரது ஆதரவாளர்கள் நேரிலேயே மிரட்டினர். இந்த வழக்கில் இருந்து விலகுவதற்காக பாஜக மேலிடத்தின் உத்தரவின் பேரில் அப்போதைய கர்நாடகா பாஜக அரசு கடும் நெருக்கடி கொடுத்தது.

ஜெயலலிதா வழக்கில் ஆஜராகியதால் பல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். ஒரு வழக்கை எப்படியெல்லாம் ஒத்தி வைக்க முடியும் என்பதற்கு ஒரு தனிப்புத்தகமே போடும் அளவுக்கு தெரிந்து கொண்டேன்.

தேவைப்பட்டால் வழக்குகளை ஒத்தி வைப்பது குறித்து 'ஒத்திவைப்பு சட்டம்' என்ற பெயரில் தனிப்புத்தகத்தையே வெளியிடலாம். அப்படி வெளியிட்டால் குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்.

2011ஆம் ஆண்டுக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ லஞ்ச ஒழிப்புத் துறையின் போக்கும் முழுமையாக மாறிவிட்டது.
இவ்வாறு ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.