டெல்லியில் நடைபெற்ற கணனிப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் 8 வயது சிறுவன் கருத்துரை நிகழ்த்தி அசத்தியுள்ளான்.
வளரும் தலைமுறையினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் கணனி குறித்த அறிமுகம், பயன்பாடு, பாதுகாப்பு ஆகியவை பற்றிய மாநாடு ஒன்று `கிரவுண்ட் ஜீரோ சம்மிட்` என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்றது.
இதில் வளரும் தலைமுறையினருக்கு உரிய கணனிப் பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது ஆன அமெரிக்க வாழ் சிறுவன் ரூபன் பால், தனது தந்தையுடன் பங்கேற்று கணனிப் பாதுகாப்பு முறைகள் குறித்து உரைநிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான்.
சிறிய வயது கணனி மேதை ரூபன் பால் தன்னைப் பற்றி கூறுகையில், ஒன்றரை வயது முதலே கணனியைக் கற்று வந்ததாகவும், தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பாதுகாப்பு புரோகிராம்களை வடிவமைத்துக் கொள்ளும் நிலையை அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளான்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேம்ஸ் உருவாக்கம் செய்யும் கம்பெனி ஒன்றை உருவாக்கிய ரூபன், அதன் தலைமை செயல் அதிகாரி(CEO) ஆவாக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது தந்தையை கம்பெனியின் பார்ட்டனராக சேர்த்துக் கொண்டுள்ளார்.
இது ரூபன் கலந்து கொள்ளும் கணனி பாதுகாப்பு குறித்த நான்காவது மாநாடு ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், உள்துறையின் இணைச் செயலாளர் நிர்மலா ஜித் சிங் கல்சி, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், கணனித் துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.


No comments:
Post a Comment