Latest News

ராஜஸ்தான் மாநிலம்; பெண்ணை கழுதை மேல் ஏற்றி நிர்வாண ஊர்வலம் 30 பேர் கைது !!


ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சம்ந்த் மாவட்டத்தில் உள்ள துர்வல் என்ற கிராமத்தில் பழங்குடி பகுதியில் வசிக்கும் பெண்ணை அவ்வூர் கிராம மக்கள் அவள் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தபட்டு அவரை கழுதை மேல் ஏற்றி முகத்தில் கரியை பூசி நிர்வாணமாக ஊரை வலம் வர செய்துள்ளனர்.

இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

இது குறித்து பாதிக்கபட்ட பெண்ணின் கணவர் போலீசாரிடம் புகார் கூறியுள்ளார் விரைந்து வந்த போலீசார் சம்பந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.

கைதானவர்களில் பாதிக்கபட்ட பெண்ணின் உறவினர்கள் 6 பேர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது;

துர்வல் கிராமத்தில் கடந்த நவம்பர் 2-ம் தேதி வர்தி சிங் என்பவர் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. அவர் மரணமடைந்த விவகாரம் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அவரது உடலை உறவினர்கள் எரித்து விட்டனர்.

மரணம் அடைந்த வர்தி சிங் மனைவி பாதிக்கபட்ட பெண் மீது சந்தேகம் அடைந்துள்ளார்.இது குறித்து ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

பஞ்சாயத்து கமிட்டியினர் பஞ்சாயத்தைக் கூட்டி விசாரித்து உள்ளனர். அப்போது பஞ்சாயத்து கமிட்டி குழு அந்தப் பெண்தான் கொலையாளி என்று அவர்களாகவே தீர்ப்பு கூறி தண்டனையையும் அறிவித்து நிறைவேற்றி உள்ளனர்.

அப்போது அந்த பெண்ணை அத்தனை பேர் முன்னிலையில் வைத்து அப்பெண்ணை நிர்வாணப்படுத்தி அவரது முகத்தில் கரியைப் பூசி கழுதை மீது ஏற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.