தமிழகத்தில் காலியாக உள்ள 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நவ.10 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பள்ளிக் கல்வித் துறையில் 2013-14 மற்றும் 2014-15ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 10 ஆம் தேதி முதல் 32 மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணபங்களை வரும் 26 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடைபெறும்.
முதுகலை தமிழ் ஆசிரியர்-227, ஆங்கிலம்-209, கணிதம்-222, இயற்பியல் -189, வேதியியல்-189, தாவரவியல்-95, விலங்கியல்-89, வரலாறு-198, பொருளியல்-177, வணிகவியல்-135, உடற்கல்வி இயக்குநர்-27 என மொத்தம் 1807 பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யபட உள்ளனர். மேலும் விபரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்.” எனக் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment