ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டறியும் பரிசோதனையை நாடு முழுவதும் இலவசமாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. தற்போது 6.7 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் பாதிப்பில் உலகிலேயே இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள சீனாவில் 9.2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 2030ம் ஆண்டில் இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும், அப்போது உலகிலேயே இந்தியா முதலிடத்துக்கு செல்லும் என்றும் மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனால், நீரிழிவு நோயின் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டறியும் பரிசோதனையை இலவசமாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக பிற அமைச்சகங்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment