நாடறிந்த மனித உரிமை ஆர்வலரும் டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ராஜிந்தர் சச்சார் மோடி பாணியினாலான தூய்மைத் திட்டம் குறித்து காட்டமான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார்.
தேசத் தந்தை காந்தி யாரின் பிறந்த நாள் அக்டோபர் 2 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சார் இவ்வாறு கூறி னார். தூய்மை, தூய்மை என்று வெற்று கூச்சல் போடுவதைவிட நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதை முக்கிய கடமையாக நாட்டு மக்களும் தலை வர்களும் ஏற்று நடக்க வேண்டும் என்றார்.
முஸ்லிம்கள் இல்லாத இந்தியா என்பதை கற் பனை செய்யக்கூட முடி யாது. அது ஒரு கொடூர மான கனவாகவே இருக்க முடியும். காந்தி யடிகள் எந்த சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டாரோ அதற் காக நாட்டு மக்கள் அனைவரும் பாடுபட வேண்டும். சமத்துவமற்ற தன்மையை இந்திய அர சியல் சாசனச் சட்டத் தின்படி சரியாக நடை முறைப்படுத்தவதின் மூலம் துடைத்து எறிய வேண்டும்.
முஸ்லிம்கள் சங்பரி வார் மதவாத சக்திகளின் அச்சுறுத்தல் குறித்து அஞ்சத் தேவையில்லை சட்டத்தின் உதவியுடன் துணிவுடன் அவர்களை எதிர்கொள்வோம்.
இன்றைய மத்திய அரசானது வெறும் 31 சதவீத ஆதரவை மட் டுமே பெற்றுள்ளது. 69 சதவீத மக்கள் மதச் சார்பற்ற சக்திகளுக்கு ஆதரவானவர்கள். ஹிந்துக்கள் முஸ்லிம்க ளிடம் மூத்த சகோதரர் களாக அன்பு காட்ட வேண்டும். ஹிந்துக்களும் ஒன்றுபட்டு மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று கேட் டுக் கொண்டார் நீதிபதி ராஜிந்தர் சச்சார்.
No comments:
Post a Comment