அன்பு சகோதரிகளே/நண்பர்களே,
சிறிது நேரம் ஒதுக்கி இந்த கட்டுரையை படிப்பதால் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களின் கர்ப்பப்பையை மட்டும் அல்ல உங்கள் ஒட்டுமொத்த உடலையும் புரிந்துகொண்டு மருந்துகள், மருத்துவம் அற்ற அழகான, சுகமான வாழ்க்கை வாழமுடியும்.
இதுவரை உடல் எப்படி தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உடையது என்பது பற்றிய கட்டுரைகளையும், புத்தகங்களையும் பதிவிட்டு வந்தோம். அந்த தத்துவங்கள் எப்படி ஒவ்வொரு நோய் நிலையிலும், செயல்படுகிறது என்பதை அனுபவ கட்டுரையாக பதிவிடவே இக்கட்டுரையை எழுதுகிறேன். முக்கியமாக கர்ப்பப்பை நோய்கள் பற்றி முதலில் பதிவிடக் காரணம், இன்று மருத்துவத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே..!
மிகவும் கேவலமான உண்மை என்னவென்றால், நம் நாட்டில் கர்ப்பப்பை இல்லாமல் வாழும் பெண்கள் அதிகம். அப்படி நான் சந்தித்ததில் ஒரு சிலரின் அனுபவங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த இரண்டு வருடம் முன்பு, 21 வயது பெண் ஒருவரை அவருடைய தாயாரும், அண்ணனும் என்னிடம் அழைத்து வந்தார்கள். அவர்கள் என்னை பார்த்தவுடன் அந்த பெண்ணின் தாயார் அழுகத் தொடங்கினார். எதுவுமே கூறாமல் அழுதவுடன், நாம் அவரை சமாதானப்படுத்தி காரணம் கேட்டேன். அவருடைய பெணுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் உள்ளதாகவும், அது நீண்ட நாட்களாக இவர்கள் கவனிக்காததாலும், இப்போது கட்டாயம் கர்ப்பப்பையை நீக்கியே ஆகவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள் என்றார்.
நான் : அம்மா, எத்தனை பேரை பார்த்தீர்கள்..?
பெண்ணின் தாயார் : இதுவரைக்கும் நான்கு பெண் “சிறப்பு” மருத்துவர்களை பார்த்துவிட்டோம், அனைவரும் ஒரே மாதிரி கட்டாயம் கர்ப்பப்பையை நீக்கியே ஆகவேண்டும் என்று கூறுகிறார்கள். என்னுடைய பெண்ணுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.. எப்படி நான் ஆபரேஷன் செய்ய சம்மதிப்பேன் என்று கூறியதற்கு, ஒரு மருத்துவர் “உன் பெண்ணுக்கு கல்யாணம் செய்வது இப்போ முக்கியமா, இல்ல அவ உயிரோடு இருக்கறது முக்கியமா – நீயே முடிவு பண்ணிக்கம்மா” என்று கூறியதாக சொல்லி மீண்டும் விசும்பினார்.
என்னை அறியாமலேயே என்னுடைய கண்கள் கலங்கியது, வேதனையில் வந்தவர்கள் முன்னால், வெளியில் காட்ட முடியாதே..! முகத்தை திருப்பி என் உதவியாளரை அழைப்பது போல் பாவனை செய்து என்னை நானே சமாதான படுத்திக்கொண்டேன். என் மனதிற்குள் ஒரு கேள்வி மின்னலாக பாய்ந்தது, உண்மையில் அந்த மருத்துவர்கள் பெண்கள்தானா..! இவர்களுக்கும் கசாப்பு கடைகாரர்களுக்கும் எந்த வித்யாசமும் இருப்பதாக அப்போது எனக்குத் தோன்றவில்லை, இன்று வரைக்கும் கூட..!
நான் : அந்த பெண்ணிடம், நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தொந்தரவு..?
அந்த பெண் : எனக்கு கர்ப்பப்பையில் கட்டி உள்ளது…
நான் : அது அவர்கள் கூறியது, உங்களுக்கு உடலில் என்ன தொந்தரவு உள்ளது..?
அந்த பெண் : மாதப்போக்கு சீராக இல்லை, இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாதப்போக்கு உள்ளது. சில முறை ஆறு மாதங்களுக்கு கூட இருப்பதில்லை. மாத்திரை சாப்பிட்டால் மட்டும் சீராக இருக்கும், அதுவும் மிகவும் குறைவாகவே இருக்கும்..
நான் : இதுபோக, இடுப்பு, மூட்டு, கழுத்து, முதுகு தண்டுவடம், குதிகால் ஆகிய பகுதிகளில் வலிகள், முடி உதிர்வு, காது, பற்கள், தொண்டை பகுதிகளில் தொந்தரவு உள்ளதா..?
அந்த பெண் : நீங்கள் சொல்வதில் சில தொந்தரவுகள் உள்ளன, மேலும் அடிக்கடி சளிப்பிடிக்கும், சில முறை காய்ச்சலும் வரும். மருந்து சாபிட்டால் சரியாகி விடும். தூக்கம் சரியாக வருவதில்லை.
நான் : சரி, முதலில் விஷங்கள் (மருந்து, மாத்திரைகள்) சாப்பிடுவதை நிறுத்துங்கள், நான் சொல்வது போல உணவு முறைகளை மாற்றுங்கள், பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், தூக்கம் கட்டாயம் இரவு ஒன்பது மணிக்குள் இருக்க வேண்டும், தாகம் உள்ள போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும், தொந்தரவு உள்ளபோது திரவ உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுங்கள், நான்கு ஓய்வு கொடுங்கள். கையை நீட்டுங்கள் நான் நாடி பார்த்து சிகிச்சை கொடுக்கிறேன்.
சிகிச்சை முடிந்தது, தொந்தரவு ஓரளவு சீராகும் வரைக்கும் வாரம் ஒருமுறை வாருங்கள். பின்பு இரண்டு வாரம் ஒருமுறையும், தொந்தரவுகள் முழுமையாக குறைந்த பின்பு இங்கு வரவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நான் சொன்னபடி உடலின் தேவைகளை எப்பொழுதும் மதித்து நடக்க வேண்டும் அப்போதுதான் புதிய நோய்கள் வராது என்று சொல்லி, கூடவே உடலின் மொழி புத்தகத்தையும் கொடுத்து அனுப்பினேன்.
அந்த பெண் : சார், இதுவரைக்கும் ஸ்கேன் ரிப்போர்ட் பார்க்கவே இல்லையே..!
நான் : வெளியில் உள்ள குப்பை கூடையில் போட்டுவிட்டு போங்கள்…!
அவர்கள் சிறிய புன்முறுவலுடன் விடைபெற்றார்கள் – ஸ்கேன் ரிப்போர்ட்டுடன்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரைக்கும் சளி அடிக்கடி பிடிப்பது, காய்ச்சல் வருவது, வயிறு, கெண்டைக்கால், கீழ் முதுகு பகுதிகளில் வலிகள் வருவதும் போவதுமாக இருந்தது.. இந்த காலங்களில் இரண்டு முறைகள் மட்டுமே மாதவிலக்கு ஏற்பட்டது. இப்போது சிகிச்சை மாதம் இருமுறை மட்டுமே கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த நாட்களில் ஏற்ப்பட்ட மாதப்போக்கு சுமார் 10-15 நாட்கள் வரைக்கும் அதிகப்படியாக இருந்தது. மேலும் இப்போது 20-25 நாட்களுக்குலேயே அடுத்த மாதப்போக்கும் ஏற்பட்டது.
இப்போது அந்த பெண் : சார், இவ்வளவு இரத்தம் வெளியேறுவதால் மிகவும் சோர்வாக உள்ளது, மேலும் இதனால் எதாவது பிரச்சனை வருமா என்றார்..!
நான் : இவ்வளவு வருடங்கள் தேங்கி உள்ள கெட்ட இரத்தம் மட்டுமே இப்பொழுது வெளியேறி வருகிறது. இது ஆரோக்யத்தின் அறிகுறி சற்று பொறுமையாக இருங்கள்.. சோர்வாக உள்ளபோது நான்கு ஓய்வு கொடுங்கள். எளிமையான செரிமானம் உள்ள உணவுகள் மட்டுமே எடுங்கள்.
தொடர்ந்த மூன்று மாதங்களில் பிரச்சனை படிப்படியாக குறைந்து வந்தது. அவ்வப்போது கீழ் முதுகு வலி மட்டுமே இருந்தது, மற்ற பிரச்சனைகள் குறைந்து விட்டன.
இப்போது, அந்த பெண் : சார், நான் உங்களுக்குஒரு விசயத்தை சொல்லாமல் விட்டுவிட்டேன். எனக்கு சிறுநீர் பாதையில் புண்கள் ஏற்பட்டு மிகவும் தொந்தரவாக இருந்தது, இப்போது அந்த பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் குணமாகிவிட்டது. முகத்தில் மகிழ்ச்சி.
நான் : இன்னும் உங்கள் உணர்வுகளுக்கும் தெரியாத பிரச்சனைகளும் சுகம் ஆகும், காரணம் அது தான் உடலின் சுய குணமாக்கும் இயக்கம். உடலின் தேவைகளை மதியுங்கள். உங்கள் உடல் உங்களுக்கு என்றைக்கும் ஆரோக்யதை தரும்.
அடுத்த மூன்று மாதங்களில் அவருடைய பிரச்சனைகள் அனைத்தும் முழுவமாக சுகமாகியது. முறையான மாதவிலக்கும் இருந்தது. இப்போதுதான், அடுத்த கேள்வி வந்தது..?
அந்த பெண் : எனக்கு எந்த தொந்தரவும் இல்லை ஆனால், அந்த கட்டி எப்படி இருக்கிறது என்று நான் எப்படி தெரிந்துகொள்வது..?
நான் : நிச்சயம் அது குணமாகி இருக்கும் பயப்பட வேண்டாம்..
அந்த பெண் : இல்லை……. நான் வேண்டுமானால் ஸ்கேன் செய்து பார்க்கட்டுமா..?
நான் : எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை, ஆனால் ஸ்கேன் கதிரியக்கம் நிச்சயம் பல பக்கவிளைவுகளை கொண்டது, கேன்சர் உட்பட.. பரவாயில்லை என்றால் பாருங்கள். ஆனால் நான் என் வாயால் பரிந்துரை செய்ய மாட்டேன்.
ஒரு வாரம் கழித்து, அவர்கள் மூவரும் வந்தார்கள். நாங்கள் முதலில் ஸ்கேன் செய்த அதே இடத்திலேயே மறுபடியும், ஸ்கேன் செய்து பார்த்தோம். ஆனால் ஆச்சர்யம் இப்போது உங்களுக்கு கட்டிகள் இல்லை, “It’s a medical miracle” என்று சொன்னார்கள். மிகவும் சந்தோஷம். இதை பாருங்கள் என்றார்கள், சந்தோஷமுடன். இப்போது நான் புன்முறுவலுடன், இதனை நான் சென்ற வாரமே கூறினேனே..! உடல் ஒருபோதும் தவறு செய்யாது. எனவே அது எனக்கு உறுதியாக தெரியும். எனவே இந்த குப்பை காகிதங்களை நான் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவுடன் அவர்களுக்கு முகத்தில் சற்று வருத்தம் ஏற்பட்டது.
“மனித உடல் ஒரு உயிர் உள்ள, உணர்வுகள் நிரம்பிய, இயற்கையின் அற்புத படைப்பு அதனை ஒரு அறிவு, உயிர் அற்ற இயந்திரத்தில் ஏற்றி, அது உங்கள் ஆரோக்யதை கணிப்பது என்பது இயற்கையை அவமதிப்பதே அன்றி வேறில்லை” எனவே அதனை நான் கைகளால் தொட மாட்டேன். நீங்கள் என்றைக்கும் ஆரோக்கியம் பெற இயற்கையின் பேராற்றல் ஒன்றே போதுமானது என்று கூறி அனுப்பினேன். இந்த முறை நான் கூறாமலேயே அந்த காகிதங்கள் அது சேர வேண்டிய குப்பை தொட்டியை அடைந்தது. இந்த புரிதல் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து கொண்டேன்.
இன்றுடன் ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, அந்த பெண்ணிற்கு எந்த தொந்தரவும் இல்லை. இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, அவருக்கு திருமணம் ஆகி தற்போது இரண்டாவது மாதம் கர்ப்பம். இயற்கையை உணர்ந்த இவர்கள் மருத்துவமனையில் தங்கள் குழந்தை பிரசவிக்கக் கூடாது என்ற உறுதியில் வீட்டில் சுகப்பிரசவமாக விரும்புகிறார்கள். இவர்களின் ஆசை நிச்சயம் பூர்த்தியாகும். இயற்கையின் பேராற்றல் என்றென்றைக்கும் இவர்களுக்கு துணை இருக்கட்டும்.
அடுத்த ஒரு சில அனுபவ கட்டுரைகளும் கர்ப்பபை சார்ந்ததே.. இதில் நான்கு முறை கர்ப்பபையில் உள்ள கட்டியை வெட்டி உள்ளார்கள், மேலும் தொடரும் கொடுமைகள் பற்றி பார்க்கலாம்.
விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை படிக்க : (இந்த புத்தகங்கள், கட்டுரைகள் – உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.)
https://www.facebook.com/rkacu/notes மற்றும்
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒரு நோயையும் குனமாகுவதும் இல்லை…!
No comments:
Post a Comment