போஜ்பூர்: பீகார் மாநிலம் போஜ்பூர் அருகில் உள்ள துமாரியா கிராமத்தைச் சேர்ந்த 5 தலித் பெண்கள், துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு சமூகவிரோத கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களது அருகில் உள்ள கிராமமான குர்முரி என்ற இடத்துக்கு பழைய இரும்பு சாமான்களை விற்க, அங்குள்ள கடைக்கு சென்று உள்ளனர். பின்னர் மாலை நேரத்தில் 5 பெண்களும் நடந்து சென்று கொண்டு இருந்தனர். இதை கவனித்த பழைய இரும்பு கடை உரிமையாளரான நீல் நிதிசிங் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் அவர்களை வழிமறித்தனர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 பேரையும் அவர்கள் இருட்டான பகுதிக்கு கடத்திச் சென்று இந்த கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். பின்னர் தலைமறைவாகி விட்டனர். இவர்களிடம் இருந்து தப்பிய ஒரு பெண் ஊருக்குள் சென்று தங்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் முதலில் வழக்கு மட்டுமே பதிவு செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு பலாத்கார குற்றவாளிகள் நில்நிதிசிங், ஜெய்பிரகாஷ் உள்ளிட்ட 3பேரை கைது செய்தனர்.
எனினும் 5 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து அங்கு பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது
No comments:
Post a Comment