Latest News

24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு புதிய முயற்சியில் இறங்கிய அதிரை இளைஞர்கள் !


அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு புதிய முயற்சியில் அதிரை இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது...
அதிரை, தஞ்சை மாவட்டத்தின் முக்கியமான ஊர்களில் இதுவும் ஒன்று.  கல்வி, தொழில்நுட்பம், கலை, விளையாட்டு, வணிகம், போக்குவரத்து மற்றும் பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ஊர் என்று பலரால் அறியப்பட்டது. ஆனால் இந்த ஊரில் மிக மிக முக்கியமான ஒரு வசதியான மருத்துவ வசதி  இருந்தும் அது பயனற்று செயல்படாமல் உள்ளது என்பது வருத்ததிற்குறிய செய்தி.

இதனால் நம் மக்கள் படும் துயரம் எண்ணில் அடங்காதது. ஒருவருக்கு கீழே விழுந்து கை உடந்துவிட்டது, சாலை விபத்து, இரவில் நெஞ்சு வலி, என்றால் கூட பட்டுக்கோட்டைக்கு ஆட்டோ பிடித்து தூக்கி செல்லும் ஆவல நிலை. இது போன்ற அடிப்படை மருத்துவ உதவிக்கு முதலுதவிக்கு கூட இரவில் வந்து பரிசோதிக்கும் மருத்துவர் கூட நமதூரில் இல்லை என்பது தான் அதிரையின் இன்றைய நிலை.

அதிரையில் பல தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனையும் உள்ளன. இவை அனைத்தும் இருந்தும் ஒரு அவசர சிகிச்சைக்கு கூட நமதூர் மக்களால் இங்கு பரிசோதிக்க முடியாமல் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு பல துயரங்ளுடன் பயனத்துக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கி செல்கின்றனர்.

ஏன் இந்த நிலை, இந்த நிலை எப்பொழுது மாறும். அதிரை மக்களே! அதிரை இளைஞர்களே! அதிரை அமைப்புகளே! அயல்நாட்டில் வசிக்கும் அதிரை அன்பர்களே! சமுக ஆர்வலர்களே! முறையான மருத்துவ வசதி இன்றி தவிக்கும் நமதூரின் நிலையை சற்று பாருங்கள். இதற்க்கு எப்பொழுது பிறக்கும் விடிவுகாலம்?

பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற‌ ஆடம்பரமான செலவுகளை செய்யும் நாம் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? வீனான விஷயங்களுக்கு நேரத்தை செலவழிக்கும் நாம் இதற்க்கு ஏன் நம் நேரத்தை செலவலிக்க தயங்குகிறோம்?

மருத்துவ வசதி என்பது ஒவ்வொரு ஊரின் அத்தியாவசிய தேவை. காய்ச்சல், தலைவலிக்கு மருந்துவம் பார்க்கும் மருத்துவமனை மட்டும் நமதூருக்கு போதுமா? அவசர சிகிச்சைக்கு என்னேரமும் செயல்படும் மருத்துவமனை அதிரைக்கு எப்பொழுது வரும்? அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணிநேர சேவை எப்பொழுது?

இவை அனைத்தும் நம் மனதில் கேள்வியாக மட்டுமே இருக்கும், இதை வெளிகொண்டு வாருங்கள்! அதிரையில் ஒரு மருத்துவ புரட்சியை ஏற்படுத்துவோம்! இதற்க்காக தற்பொழுது அதிரையை சேர்ந்த சில இளைஞர்கள் தங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்பிள் போன்ற அனைத்து விதமான சோசியல் நெட்வொர்க் களிலிம் அதிரையில் 24 மணி நேர மருத்துவமனையை வழியுறுத்திய லோகைவை தங்கள் ப்ரொபைல் பிக்சராக மாற்றவுள்ளனர். இதனை படிக்கும் வாசகர்களான நீங்களும் உங்கள் ப்ரொஃபைல் பிக்சராக மேலே உள்ள படத்தை மாற்றி இளைஞர்களின் முயற்சிக்கு வழு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலுன் இந்த செய்தியையும் உங்கள் முகநூல், வாட்ஸ் ஆப் அனைத்திலும் பகிருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரையில் 24X7 மணி நேர மருத்துவ வசதியை ஏற்ப்படுத்த நினைக்கும் இளைஞர்கள்

பரிந்துரை : நூருல் இப்னு ஜெஹபர் அலி

நன்றி : அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.