கலவை அருகே போலீஸ் என்று சொல்லி அழைத்துச் சென்று தன்னை கற்பழித்ததாக ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் புகார்
வேலூர் மாவட்டம், கலவை அருகே உள்ள மாந்தாங்கல் கிராமம் இருளர் காலனியை சேர்ந்தவர் செல்லப்பன். அவரது மனைவி பரமேஸ்வரி (வயது 20). இவர்களுக்கு ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று பரமேஸ்வரி கலவை போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:–
போலீஸ் என சொல்லி…
24–ந் தேதியன்று இரவில் தங்களது வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் தீபாவளி நாளன்று கலவையில் மதுபானக்கடையில் திருட்டு போனதாகவும், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் என்னையும், எனது கணவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறினார்.
பின்னர் என்னையும், எனது கணவரையும் மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தட்டச்சேரி வழியாக மாம்பாக்கம் மின் நிலையம் பின்புறம் உள்ள ஒரு பழைய கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு என்னையும், எனது கணவரையும் அடித்து முழு நிர்வாணப்படுத்தி அடித்தார்.
கற்பழிப்பு
பின்னர் இரவு ஒரு மணி வரை கணவர் கண் முன்னே என்னை கற்பழித்தார். எனது கணவர் சத்தம் போட்ட போதெல்லாம் அவரை காலால் எட்டி உதைத்தார். மேலும் சத்தம் போட்டால் உன் குழந்தை அநாதையாகி விடும் என மிரட்டலும் விடுத்தார். பின்னர் எனது கணவரையுயும் கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொள்ள வைத்தார்.
பின்னர் இரவு 1 மணி அளவில் அந்த நபர் எங்களை மாம்பாக்கம் கூட்ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி, வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இரவு சுமார் 2 மணியளவில் நாங்கள் வீட்டிற்கு வந்தோம். அதன்பின்னர் இது தொடர்பாக கலவை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தோம். போலீஸ் என்று சொல்லி எங்களை அழைத்துச் சென்ற நபர் கருப்பு நிறமாக இருந்தார். பேண்ட்– சர்ட், மங்கி குல்லா அணிந்து, சட்டைப்பையில் கண்ணாடி வைத்திருந்தார். பற்கள் கரை படிந்த நிலையில், முகத்தில் வெட்டுக்காயம் இருந்தது. ஆளை பார்த்தால் அடையாளம் தெரியும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் பரமேஸ்வரி குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment