பெண்ணுக்கு தவறாக மெயில் அனுப்பி தொல்லை கொடுத்துவந்த பாரதீய ஜனதா இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சைபராபாத் போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்தவர் காஜூலா வெங்கையா நாயுடு. இவர் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான் யுவ மோர்ச்சாவின் தலைவராக உள்ளார். காஜூலா வெங்கையா நாயுடு தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயுடு பெண்ணுக்கு தவறான மெயில், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தெனாலியில் கைது செய்யப்பட்ட நாயுடு ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த வருடம் மே மாதம் ஏற்கனவே பெண் கொடுத்த புகாரின்படி நாயுடு கைது செய்யப்பட்டவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொல்லை தாங்க முடியாமல் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து நாயுடு கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் சிறையில் இருந்து வெளியே வந்ததும் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்ந்துள்ளார். என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வீடு வாங்குவதற்காக, நாயுடுவிடம் கடன் வாங்கியபோது அவரை சந்தித்துள்ளார். இதனையடுத்தே நாயுடு பெண்ணுக்கு தொல்லை கொடுத்துவந்துள்ளார். தவறான குறுஞ்செய்திகள் மற்றும் ஆபாசமான போட்டோக்களை அனுப்பி வந்துள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment