நெல்லை: வரும் ஜனவரி மாதம் புதிய வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்து வெளியிடப்படுகிறது. இதற்கான பயிற்சி முகாம் நெல்லையில் நடந்தது.வரும் ஜனவரி மாதம் புதிய வாக்காளர் பட்டியிலில் திருத்தம் செய்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திருத்த பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.புதிய வாக்காளர் பட்டியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட வாக்கு பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் உதவி பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் துவங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: 1.1.2015ஐ தகுதியாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் திருத்துதல், நீக்குதல் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் மாதம் இப்பணிகளை மேற்கொள்ள அதற்கென உள்ள படிவங்களை பூர்த்தி செய்து பெறப்பட உள்ளது.இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை உதவி தேர்தல் பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் பதிவு அலுவலர் கவனத்துடன் பரீசிலித்து தகுதி உடை.யவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் எவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்வது என்பதற்காக இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமில் 2015ம் ஆண்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை அடிப்படையாக கொண்டு உரிய பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குதல், பிழைகளை திருத்துதல், வண்ண புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல் போன்ற பணிகள் குறித்து கணினி திரை மூலம் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது என்றார் அவர்.
No comments:
Post a Comment