அஜ்மான்: அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையத்தில் இன்று (21.09.2014) முதல் 30.09.2014 வரை பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது.இம்மருத்துவ ஆலோசனை முகாமில் டாக்டர் சலீம் ஜமாலுதீன் அவர்கள் இதயநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.
இலவச மருத்துவ ஆலோசனையினை வெள்ளிக்கிழமை தவிர பிற நாட்களில் காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பெறலாம்.அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையம் டிரீம் சீ டிஸ்கௌண்ட் சென்டர் அருகிலும் அரப் பேங்க் எதிரிலும் அமைந்துள்ளது.
இது குறித்து மேலும் விபரம் அறிய 06 74 73 100 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment