மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் போபாலில் விவசாயிகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெறற்து. இந்நிகழ்ச்சியில் சியோனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. தினேஷ் ராய் கலந்து கொண்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில விவசாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் கவுரிசங்கர், முன்னாள் எம்.பி. நீத்தா பட்டேரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் நீத்தா நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் வந்த சுயேட்சை எம்.எல்,ஏவான தினேஷ் ராய் முந்தானையில் கையை துடைத்தது கேமராவில் பதிவானது. தனது முந்தானையில் கையை துடைத்த தினேஷ் ராயை நீத்தா கடுமையாக விமர்சித்தார் இச் சம்பவம் குறித்து பாஜக தலைமையிடமத்தில் புகார் தெரிவித்தார் இது குறித்து விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.
இது குறித்து நீத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது; சுயேட்சை எம்.எல்.ஏ. என்னிடம் கண்ணியத்தோடு நடந்திருக்க வேண்டும். அவரின் செயல் எனக்கு மன வருத்தை அளிக்கிறது. அவர் என்னை அண்ணி அல்லது அக்கா என்றோ அழைக்கலாம். ஆனால் அவர் தனது நிலையை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சுயேட்சை எம்.எல்.ஏ தினேஷ் ராய் உள்ளங்கையில் என் கை சுத்தமாகத்தான் இருந்தது. வேடிக்கையாகத்தான் நான் இதை செய்தேன் அவர் எனக்கு அண்ணி போன்றவர் அப்படி இருக்கையில் நான் இவ்வாறு எப்படி நடந்துகொள்வேன் என்று தெரிவித்தார். நான் அவரை தொடவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment