திருமணத்திற்கு முன்பாக மணமகன் மற்றும் மணமகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேனியை சேர்ந்த தம்பதியரின் தாம்பத்ய உறவின் காரணமாக பாலியல் ரீதியான பிரச்னை எழுந்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 13ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (18ஆம் தேதி) வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் கந்தசாமி வாதிடுகையில், ”திருமணத்திற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை நடத்துவது தனி மனித உரிமையைப் பாதிக்கும்” என்றார்.
இதையடுத்து வாதிட்ட மனுதாரர் வழக்கறிஞர், ”இந்த மருத்துவப் பரிசோதனையில் பொது மருத்துவர் போலி சான்று கொடுத்தால் அவருக்கு தண்டனை விதிப்பதுடன், அவரது மருத்துவப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
இதையடுத்து, பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment