சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் வாழ வேண்டும் என்று சர்ச்சைக்குரிய பாரதீய ஜனதா எம்.பி. யோகி ஆதித்தியானாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கிரிஷி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதீய ஜனதா எம்.பி. யோகி ஆதித்தியானாத், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் பாகிஸ்தானில் பிறந்து இறுக்க வேண்டும், ஏனென்றால் அவர் அப்பட்டமாக இஸ்லாமியர்களை திருப்திபடுத்தும் கொள்கைகளையே நம்புகிறார். என்று கூறியதாக செய்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்தியானாத், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கை, இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் வாழ கேட்டுக் கொண்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி அரை யோகி ஆதித்தியானாத் கடுமையாக சாடினார். மாநில அரசு பாரபட்சமாக குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பின்னே செல்கிறது. மாநில அரசு மாநிலத்தில் நிலவும் மின் பிரச்சனையை தீர்க்க அரசு பணத்தை செலவிட வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்சனையை சீர்செய்ய வேண்டும் என்று ஆதித்தியானாத் பேசியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment