சர்வதேச மாணவர்களுக்கு ஜப்பான் அரசு கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலைகல்வி படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இவற்றை பயன்படுத்தி ஜப்பான் நாட்டில் காணப்படும் கல்வி நிறுவனங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மேற்கல்வி பயின்று வருகின்றனர்.
ஜப்பான் டோசிக்கன் நகரில் உள்ள ஆஷிகாஹா கம்யூணிட்டி கல்லூரியில் இந்தியர்கள் உட்பட சீனா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் இந்தியர்களில் அதிரை மாணவர்களும் உண்டு. நமதூரைச் சேர்ந்த சம்சுல் ரஹ்மான், மொய்தீன், அசாருதீன் ஆகியோர் இன்று கல்லூரியில் நடைபெற்ற ஜப்பான் மொழியிலான பேச்சு போட்டியில் பங்கேற்று பாராட்டுகளை தட்டிசென்றனர். சக மாணவர்கள் இவர்களை ஊக்குவித்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment