.
பின்னர் திருவள்ளூர் மாவட்ட அதிமுகவில் நேற்று அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து மாதவரம் மூர்த்தி நீக்கப்பட்டார்.அத்துடன் திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு என செயல்பட்டு வரும் அதிமுக அமைப்புகள் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவள்ளுர் மேற்கு மாவட்டம் என பிரிக்கப்பட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பி.வி. ரமணா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மேலும் ஒரு அதிரடியாக மாதவரம் மூர்த்தியின் அமைச்சர் பதவியும் இன்று பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் பால்வளத்துறை அமைச்சராக பி.வி. ரமணா மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment