சென்னையில் திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை கற்பழித்த புகாரில், ஜெராக்ஸ் கடை அதிபர் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண் ஹேமா
சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமா (வயது 20- பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
பட்டப்படிப்பு படித்துள்ள நான் சென்னை வில்லிவாக்கம், சிட்கோநகரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தேன். கடை உரிமையாளர் மகேஷ் (34), என்னிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டார். அவர் தனது ஆசைக்கு என்னை இணங்க சொன்னார். நான் மறுத்துவிட்டேன்.
ஒருநாள் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, என்னை மயக்கிவிட்டார். நான் மயக்கமாக இருந்த நேரத்தில், அவர் என்னை கற்பழித்துவிட்டார். அதன்பிறகு என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். அதை நானும் உண்மை என்று நம்பினேன். ஜெராக்ஸ் கடையை படுக்கை அறை ஆக்கி தினமும், என்னோடு உறவு வைத்துக்கொண்டார்.
கருகலைப்பு
அதன் விளைவாக நான் கர்ப்பமானேன். ஆனால் அவரது வற்புறுத்தலின் பேரில், கருவை கலைத்து விட்டேன். கடந்த மே மாதம் திருமணம் செய்துகொள்வதாக, அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதிபடி திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹேமா தனது புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக, அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலாவதி, கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கைது
ஜெராக்ஸ் கடை அதிபர் மகேஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் தன்மீது கூறப்பட்ட புகார்களை மறுத்தார்.
No comments:
Post a Comment