சங்கரன்கோவில்: சங்கரன் கோவில் இந்துமுன்னணி பிரமுகர் ஜீவராஜன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவராஜன். முன்னாள் இந்து முன்னணி நகர செய்லாளரான இவர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் அவரை கழுத்தை கொன்றுவிட்டு, நாடகமாடியதாக அவருடைய மனைவியை காவல்துறையினர் நேற்று இரவில் கைது செய்தனர்.
பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்து முன்னணி பிரமுகர் ஜீவராஜனும், அவருடைய மனைவி அய்யம்மாளும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா தேவி என்பவரை, ஜீவா 2–வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்புதான் ஜீவாவுக்கும், அய்யம்மாளுக்கும் இடையே வாழ்க்கையில் புயல் வீசியது. கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இருந்தாலும் அய்யம்மாள், ஷர்மிளாதேவி மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் ஜீவா வசித்து வந்தார்.
சமீப காலமாக 2–வது மனைவி ஷர்மிளாதேவியுடன் சேர்ந்து அய்யம்மாளை ஜீவா துன்புறுத்தி வந்தாராம். இதனால் உள்ளூரில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு அய்யம்மாள் சென்றுவிட்டார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு வெளியே ஜீவா படுத்து இருந்தார். அவருடைய 2–வது மனைவி ஷர்மிளாதேவி வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளும் தூங்கிவிட்டனர். நள்ளிரவில் அங்கு வந்த அய்யம்மாள், கணவர் படுத்து இருந்த படுக்கையைச் சுற்றி மிளகாய் பொடியை தூவியதுடன், ஜீவாவின் முகத்திலும் மிளகாய் பொடியை வீசியுள்ளார். பின்னர் அரிவாள்மனையால் கணவரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் என்று தெரிய வருகிறது. இதற்கிடையே சற்று நேரத்தில் ரத்தவெள்ளத்தில் ஜீவா பிணமானார்.
அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று காலையில் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல் கணவரின் வீட்டுக்கு வந்த அய்யம்மாள், கணவரின் உடலை பார்த்து கதறி அழுது நாடகமாடினார்.
ஆனால் ஐயம்மாளின் நடவடிக்கை காவல்துறையினருக்கு சந்தேகத்தை எழுப்பியது, அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், கணவரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது.
2–வது மனைவியுடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை கொன்றதாக அய்யம்மாள் காவல்துறையினரிடம் தெரிவித்து இருக்கிறார்.
No comments:
Post a Comment