கோலாலம்பூர்/கிவ்: உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வரும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்மாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு எம்எச் 17 போயிங் 777 விமானம் நேற்று புறப்பட்டது. இதில், 280 பயணிகளும், 15 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டு, உக்ரைன் நாட்டின் வான்வழியில் பறந்து கொண்டிருந்தது.
கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணத்தின் ஷாக்டார்ஸ்க் நகரில் மீது விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென நொறுங்கி வீழ்ந்தது. இதில் விமானம் நடுவானில் சிதறி தீப்பிழம்பாக நொறுங்கியதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் ராணுவத்துக்கும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கிழக்கு உக்ரைனில் தற்போது பெரும் மோதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ரஷ்ய ஜெட் விமானங்கள், உக்ரைனின் எஸ்யு&25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தின. இதைத்தொடர்ந்து, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment