அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான 14 ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று மேலத்தெரு WSC மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
நேற்று இரவு முதல் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்டத்தில் பல்வேறு ஊர்களை அணிகள் பங்கேற்று ஆடியது. போட்டியின் இறுதியில் முதல் பரிசை திருச்சி அணியினர் ரூபாய் 20,000/ த்தையும்,இரண்டாம் பரிசைஅதிரை KMC அணியினர் ரூபாய் 15,000/ த்தையும், மூன்றாம் பரிசை மதுரை அணியினர் ரூபாய் 10,000/ த்தையும், நான்காம் பரிசை திருப்பூர் அணியினர் ரூபாய் 8,000/ த்தை தட்டிச்சென்றனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரை KMC அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் ஜமீம் ஆட்ட நாயகன் பரிசை தட்டிசென்றார்.
இன்றைய ஆட்ட இறுதியில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை காவல்துறை அதிகாரிகள், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு ராமச்சந்திரன், தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், WSC முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள்.
சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படும் வரதராஜன் மற்றும் அருள் ஜோதி ஆகியோர் இன்றும் நேற்றும் நடைபெற்ற போட்டிகளுக்கு நடுவர்களாக பணி புரிந்தனர். நிகழ்சிகளை ராஜேந்திரன் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
இன்றைய இறுதி ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகைதந்து ரசித்தனர்.வந்திருந்த அனைவருக்கும் அமர்ந்து பார்வையிட நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களத்திலிருந்து அப்துல் வஹாப் ( உஜாலா )
Thanks : ADIRAI NEWS
No comments:
Post a Comment