ஸ்கேன்’ பரிசோதனையின் போது 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.‘ஸ்கேன்’ பரிசோதனை
தானே, டோம்பிவிலியை சேர்ந்தவர் ஹெக்டே. இவரது மகள் பிரத்வி(வயது6). அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தாள். இந்தநிலையில், திடீரென சிறுமி பிரத்வி நோய் வாய்ப்பட்டாள். இதையடுத்து, பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காண்பித்தனர். மருத்துவரின் அறுவுறுத்தலின் பேரில் சம்பவத்தன்று பிரத்வியை அவளது பெற்றோர் ‘ஸ்கேன்’ பரிசோதனைக்காக டோம்பிவிலியில் உள்ள ஒரு பரிசோதனை மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமி பிரத்விக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
இந்தநிலையில், சிறுமி பிரத்வி பரிசோதனை முடிந்து வெகுநேரமாகியும் மயக்கத்தில் இருந்து மீளவில்லை.
சிறுமி சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவள் இறந்து போயிருந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த பிரத்வியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்த மான்பாடா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிரத்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பிரத்வி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது தெரியவந்தது.
அதிகளவில் மயக்க மருந்து கொடுத்ததே சிறுமி பிரத்வி இறந்து போனதற்கு காரணம் என்று அவரது பெற்றோர் கூறினார்கள். இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
No comments:
Post a Comment