டியூஷன் படிக்க வந்த பிளஸ் 2 மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலி யல் பலாத்காரம் செய்ததுடன், செல்போனில் படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்ட டியூஷன் ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மணலி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், 2009ல் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தபோது கணக்கு சரியாக வராததால், அதே பகுதியில் செல்வராஜ் (38) என்பவரிடம் டியூஷன் சேர்ந்து படித்துள்ளார். இந்நிலையில்
, கடந்த 1-11-2009 அன்று டியூஷனுக்கு வந்த மாணவிக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து செல்வராஜ் கொடுத்துள்ளார். மாணவி மயங்கியதும், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள் ளார். அதை தனது செல்போனில் படம் பிடித்து ப்ளூடூத் மூலம் மற்றவர்களுக்கு பரப்பியதோடு இன்டர்நெட்டிலும் வெளி யிட்டுள்ளார்.இதுபற்றி அறிந்த சம்பந்தப்பட்ட மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து 15-12-2009 அன்று மணலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்து போலீசார், டியூஷன் ஆசிரியர் செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி முருகன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், கணக்கு பாடம் படிக்க டியூஷனுக்கு வந்த பிளஸ் 2 மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகவும், அதை செல்போனில் படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்ட குற்றத்திற்காக வும், குற்றவாளி செல்வராஜுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ழீ1.05 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறினார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.எஸ்.சவுந்தரராஜன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து செல்வராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment