அமெரிக்காவில் பண்டைய காலத்து மின்சார நாற்காலியில் வைத்து கொலை செய்யும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் மரண தண்டனை கைதிகள் அதிகம் இருக்கும் டென்னீஸ் மாநிலத்தில் மின்சார நாற்காலியில் வைத்து கெலவன் லாக்கெட் (38) என்பவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் விஷ ஊசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேலும் அந்த மாநிலத்தின் கவர்னர் லில் அஸ்லாம், விஷ ஊசிகள் கிடைக்கவில்லை என்றால் மின்சார நாற்காலி உபயோகப்படுத்தலாம் என்ற புது சட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார். தற்போது 74 மரண தண்டனைக் கைதிகள் கொண்ட டென்னீஸ் மாநிலம் தான் முதன் முதலில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து மரண தண்டனை தகவல் நிலையத்தின் நிர்வாக இயக்குனர் ரிச்சர் டைடர் கூறுகையில், இந்த நடவடிக்கை அமெரிக்க சட்டத்திற்கு எதிரானது என்றும், இது மனித தன்மையற்ற செயல் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த தண்டனைக்கு 56 சதவிகித டென்னீஸ் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த மின்சார நாற்காலியானது இதற்கு முன்பு 1890ம் ஆண்டு நியூயோர்க் நகரில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment