அந்த பறக்கும் ரோபோ எப்படி டெலிவரி செய்கிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்…
நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த பாத்து ஆண்டுகளுக்கு முன்னர் நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களையெல்லாம் அறிவியல் அற்புதமாக நடத்திக் கொண்டிருக்கிறது.
பிஸ்ஸா விநியோகம்
இன்றைய யுகத்தில் பிஸ்ஸா போன்ற உணவுகளை சாப்பிடுவது நாகரீகத்தின் உச்சமாக கருதப்படுகிறது.இத்தாலிய ரொட்டியான அந்த பிஸ்ஸா இன்று உலகின் எல்லா நகரங்களிலும் அமோகமாக விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
இந்த தொழிலில் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு யுத்திகளை பிஸ்ஸா கடை வைத்திருக்கும் நிறுவனங்கள் கையாள்கின்றன.இந்த பிஸ்ஸாவை தொலைபேசி வழியாக ஆர்டர் செய்தால் சூடு பறக்க சில மணித்துளிகளில் வீட்டு வாசலுக்கே விநியோகம் செய்யப் படுவது உலகெங்கும் நடைபெற்று வருகிறது.
ஆனால் இதை டோர் டெலிவரி செய்யும் போது இந்த நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசல்கள் தாம்.இந்த போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி சின்னாபின்னமாகி குறித்த நேரத்துக்குள் டெலிவரி செய்யாவிட்டால்.. பிஸ்ஸா சூடு ஆறிப் போய் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
குறித்த நேரத்துக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்ற உந்துதலில் மோட்டார் சைக்கிள்களில் டெலிவரி பாய்கள் சாகச பயணங்களை செய்து டெலிவரி செய்வது சில நேரங்களில் அவர்களது உயிருக்கே உலை வைத்து விடுகிறது.
போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இத்தகைய இடைஞ்சல்களை சமாளிக்க மும்பையில் புதிய யுத்தி ஒன்றை சோதனை முயற்சியாக செய்திருக்கிறது ஒரு பிஸ்ஸா நிறுவனம்.
பறக்கும் ரோபோ
மும்பையில் இயங்கும் பிரபல பிஸ்ஸா ரொட்டி உணவகமான Francesco’s Pizzeria நிறுவனம் பெயரிடப்படாத பறக்கும் ரோபோ ஒன்றை பிஸ்ஸா டோர் டெலிவரிக்காக கடந்த மே 11 ந் தேதி முதல் பயன் படுத்தி வருகிறது.இந்த முயற்சி முழு வெற்றியடையும் பட்சத்தில் “மோட்டார் சைக்கிள் சாகச” டெலிவரி முறை நிறுத்தப் பட்டு இத்தகைய பறக்கும் ரோபோக்கள் இத் தொழிலில் ஈடுபடுத்தப் படும் என்பதாக அந்த பிஸ்ஸா நிறுவனம் கூறுகிறது.
No comments:
Post a Comment