Latest News

யாருடனும் ‘கை’ குலுக்க தயார்: மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் – கருணாநிதி!


நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய யார் கை கொடுத்தாலும் அவர்களோடு கை குலுக்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

கருணாநிதி தனியாக நிற்கிறார்; அவரை கைவிட்டு விட்டனர் என சிலர் கூறுகின்றனர். யாரும் என்னை கைவிடவில்லை.

எதிர்காலத்தில் நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன். மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களை கை குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன்.

ஜாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்ற கொள்கைகளோடு சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக தி.மு.க., இருக்கும். நான் கொண்டு வந்த திட்டங்களை தடுத்து நிறுத்துவது தான் ஜெயலலிதாவின் சாதனையாக உள்ளது.

அவர் ஆட்சிக்கு வந்தவுடன், புதிய தலைமைச் செயலகத்தை இடித்து தள்ளினார்; அண்ணா நுாலகத்தை இழுத்து மூடினார். கடந்த ஆட்சியில் விட்டுப்போன திட்டங்களை தொடர்வது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.