ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மீது தடை விதிப்பதோடு, வன்முறையை தூண்டுபவர்களை நாட்டை விட்டே துரத்துவோம் என்று
பீகார் முன்னாள் முதல்வரும் முன்னாள் ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பீகார் நவாடா தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கிரிராஜ் சிங் துவேஷமாகப் பேசிய பேச்சுகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், “பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு பற்றி எரியும். அந்த வன்முறை தீயில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறுத்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வதைபடுவார்கள். இந்திய தேசம் சிதைக்கப்படும். இத்தகைய சக்திகளின் கைகளில் நாடு செல்லாமல் ஆண்டவனே தடுக்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய லாலுபிரசாத், “பாஜகவின் கறை படிந்த முகத்தை இத்தகைய வெறுப்புப் பேச்சுகள் காட்டுகிறது” என்றும், “ராஷ்டிரீய ஜனதா தள கட்சி வசம் ஆட்சி அதிகாரம் வந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி மீது தடை விதிக்கப்படும். வன்முறையை தூண்டுபவர்களை நாட்டை விட்டே துரத்துவோம்” என்று உறுதியாகக் கூறினார். கிரிராஜ்சிங்கின் பிரசாரத்துக்குத் தடை விதித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை தான் வரவேற்பதாகவும் லாலு பிரசாத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment