உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் மோடியை விட கெஜ்ரிவால் முந்துவதாக அமெரிக்காவின் டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டைம் நாளிதழ் உலக அளவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இக்கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முந்தி இடம் பிடித்துள்ளார்.
உலகின் புகழ் பெற்ற 100 பேர் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால் இடம் பெறலாமா என்ற கேள்விக்கு 71.5 சதவீதம் பேர் ஆம் என்றும் 28.5 சதவீதம் பேர் இல்லை என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதேபோன்று மோடி பட்டியலில் இடம்பெறலாமா என்பதற்கு 49.7 சதவீதம் பேர் ஆம் என்றும் 50.5 சதவீதம் பேர் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக 16.52 சதவீதம் பேரும் இல்லை என்று 83.5 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment