கட்டுமானம், வர்த்தகம், ஆடம்பர விடுதிகள் இவை அனைத்தும் பெயர் போன இடம் துபாய்.
1398162439-4-dubaiதுபாய் ரியல் எஸ்டேட்டில் 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியார்கள் மற்றும் இந்தியா நிறுவனங்கள் சுமார் 1.6 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மெத்த முதலீட்டு தொகையில் இந்தியர்களின் பங்கு அதிகம் என அந்நாட்டு அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடமும் இந்தியர்களின் முதலீடு தான் அதிகமாக இருந்தது குறிப்பிடதக்கது.
111 நாடுகள்
2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 111 நாடுகள் ரியல் எஸ்டேட் துறையில் பங்குபெற்றுள்ளதாக துபாய் லேண்டு டிப்பார்ட்மென்டு தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள்
துபாய் மண்ணில் முதலிடு செய்ய பிறநாட்டவர்களில் இந்தியர்களின் பங்கு எண்ணிக்கையிலும் சரி, தொகையிலும் சரி மிகவும் அதிகம். இக்காலாண்டில் மட்டும் 2,414 இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் 1.6 பில்லியன் டாலர்களை அல்லது 5.895 பில்லியன் திர்ஹம்ஸ் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த முதலீட்டாளர்களில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களும் அடக்கம்.
பிரட்டன், பாகிஸ்தான்
இந்தியாவை தொடர்ந்து துபாயில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் பிரட்டன் 3.145 பில்லியன் திர்ஹம்ஸ் முதலீட்டுடன் முன்றாம் இடத்திலும், பாகிஸ்தான் 2.410 பில்லியன் திர்ஹம்ஸ் முதலீட்டுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.
ஏமிரேட்ஸ்
மொத்தத்தில் துபாயில் அதிகளவில் முதலீடு செய்த நாடு என்று பார்க்கும் போது அதன் துணை நாடுகளான எமிரேட்ஸ் பகுதிகள் முதல் இடத்தில் உள்ளன. பிற நாடுகள் என்று பார்க்கும்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது.
9.5 பில்லியன் டாலர்
நடப்பு நிதியாண்ட்ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதிகள் மற்றும் பிற நாடுகள் என ஒட்டுமொத்தமாக 9.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 57 சதவீதம் அதிகமாகும். கடந்த வருடமும் இந்தியர்களின் முதலீடு அதிகளவில் இருந்தது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment