குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் நாடு இருண்ட காலத்துக்கு சென்று விடும்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
மோடி பிரதமரானால் நாடு இருண்ட காலத்துக்கு சென்று விடும் என மம்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மோடி அவரது சொந்த மாநிலத்தில் கலவரங்களுக்கு தலைமை ஏற்று நடத்தியவர். தற்போது அவரது கவனம் மேற்கு வங்கத்தின் மீது திரும்பியுள்ளது. அவர் பிரதமரானால் நாடு இருண்ட காலத்துக்கு சென்றுவிடும். நாட்டில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க நினைப்பவர் அவர். திரிணாமுல் காங்கிரஸ் அனைவரையும் சகோதர சகோதரியாக பார்க்கிறது. மக்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்க விரும்பவில்லை.
ஜாதி அரசியல், அழுக்கு அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபடுவதில்லை. உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகள் வரிசையில் வங்க மொழி 5வது இடத்தில் உள்ளது. வங்க மொழி பேசுபவர்கள் அனைவரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல. 1971ம் ஆண்டு இந்திரா காந்தி & முஜிபர் ரகுமான் ஒப்பந்தப்படி லட்சக்கணக்கான வங்க தேசத்தினர் இந்தியா வந்தனர். அவர்கள் அனைவரும் சட்டப்படி இந்தியாவில் குடியேறியவர்கள். இவ்வாறு மம்தா கூறிஉள்ளார்.
No comments:
Post a Comment