தேர்தலுக்கு பின்னர் மத்தியில் 3வது அணி ஆட்சி அமைத்தால் முலாயம் சிங் யாதவ் தான் பிரதமர் என்று அவரது மகனும், உத்திரப்பிரதேச முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ்,
மத்தியில் 3வது அணி ஆட்சி அமைத்தால் முலாயம் சிங் யாதவ் தான் பிரதமர். பலமுறை முதல் அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள முலாயம் சிங், நரேந்திர மோடியை விட அதிக அனுபவம் உள்ளவர் என்றார்.
No comments:
Post a Comment